“வினையூக்கி” என்பது அவர் தன்னை விவரிக்க பணிவுடன் பயன்படுத்தும் வார்த்தையாகும், இருப்பினும் அவரது மாணவர்களும் அசோசியேட்களும் அவரை நிதிச் சந்தைகளில் தங்கள் “வழிகாட்டி” என்று அன்புடன் கருதுகின்றனர்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் நிதிச் சுதந்திரத்தை அடைய வேண்டும் என்ற அழுத்தமான பார்வை கொண்ட திரு. அவதுத் சாதே அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான டிரேடிங் மற்றும் முதலீட்டு அனுபவத்தைக் கொண்ட ஒரு வெற்றிகரமான டிரேடர் ஆவார். அவர் டைம்-டெஸ்டட் டூல்களைப் பயன்படுத்தி, பல லட்சம் வெற்றிக் கதைகளுக்குப் பங்களிக்கும் தொழில்நுட்பப் பகுப்பாய்வின் ஞான அடிப்படையிலான திறனைப் பெறுவதற்கு மக்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்!
அவர் “செல்வ செழிப்பு என்பது ஒவ்வொரு இந்தியனின் பிறப்புரிமை” என்கிறார்.”
பொறுமை, ஒழுக்கம், தைரியம், இரக்கம் போன்ற நற்பண்புகள் பயிற்சி இடத்தில் அவரது ஒவ்வொரு முயற்சியிலும் அடித்தளமாக அமைகின்றன. சரியான முறையில் வழிப்படுத்தப்பட்டால், மனம் ஒரு பவர்ஹவுஸ் என்று அவர் நம்புகிறார். அதன்படி, அவர் வடிவமைத்த ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சரியான முதலீடு மற்றும் டிரேடிங் உளவியலை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக கற்பித்தல் மற்றும் பயிற்சி என்ற உன்னதமான மற்றும் நேர்மையான தொழிலில் மூழ்கி, அவர் மிகவும் கவனமாகவும் அன்பாகவும் வளர்த்த AFOOFA (all-for-one-one-for-all) கலாச்சாரத்தில் வாழும் மக்களால் சூழப்பட்டுள்ளார். கூட்டு தலைவிதியின் சக்திக்கு பின்னால் திரு. அவதுத் சாத்தேவின் ஐடியா தான் காரணம் என்பதற்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 600 க்கும் மேற்பட்ட லீடர்கள் மற்றும் மானிட்டர்களை கொண்டிருப்பதே ஒரு சாட்சியாகும்./p>
கார்ப்பரேட் உலகில் ஒரு உயர்ந்த சாதனையாளர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைப் பெற்ற அவர், நிதிச் சந்தைகளில் எவ்வாறு செல்ல வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதில் உத்தி ரீதியாக மக்களை வழிநடத்தும் ஒரு திறனைப் பெற்றுள்ளார். அவரது புதுமைக்கருத்து, அவதுத் சாதே டிரேடிங் அகாடமி (‘ASTA’) இதுவரை ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொண்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது கீழே குறிப்பிட்டுள்ள நம்பிக்கையின் ஒரு வலுவான அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது:
“ASTA வில், வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் மற்றும் ஒவ்வொரு ASTAனியரும் ஒரு பிரபலம்”